இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோருக்கு இடையிலான
சந்திப்பு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றிருந்தது.
இந்த சந்திப்பு முன்னதாக நண்பகல் 12 மணி அளவில் நடைபெறவிருந்த போதும், மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்து ஒன்றில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை 3.30வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் முழுமையான விபரங்கள் எவையும் வெளியாகவில்லை. எனினும் ஈழத் தமிழக மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு, முல்லை பெரியாறு அணை, கூடங்குளம் மின்சார நிலையம், நதி இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தமிழக மீனவர்களின் பிரச்சினை, ஈழத் தமிழர்களின் பிரச்சினை போன்றவை குறித்து 88 பக்க அறிக்கை ஒன்றையும் ஜெயலலிதா, நரேந்திர மோடியிடம் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment