முள்ளிவாய்க்கால் மறக்கப்படாத வரலாறுகளில் ஒன்று. எத்தனையோ உயிர்களை கண்முன்னே பறித்துச் சென்று இருக்கின்றது. தமிழினத்தின்
குருதி அந்நிலத்தில் இன்னும் உறைந்து போய் இருக்கின்றது. தாய், தந்தை, சிறுவர்கள், சிறுமிகள் என பலரை இந்த நிலம் பறித்திருக்கின்றது. இறுதிவரை தம் விடிவிற்காக போராடிய நிலம் இன்று தோற்றுப்போய் இருக்கின்றது. இப்போது இந்நிலம் சுற்றுலா மையங்களாகவும் இராணுவத்திற்கு சொந்தமான காணிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிராக நீண்ட காலம் தொடங்கிய ஆயுத யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முள்ளிவாய்க்கால் கரையோடு முடிவுற்றது. இந்த அழிப்பினால் எத்தனையோ சிறுவர் சிறுமிகள் அநாதைகளாக்கப்பட்டும் காணமல் போயும் இருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக இன்று விசாரிக்கப்படுவதும் கைது செய்வதும் என நடந்துகொண்டே இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களின் ஒரு அழியாத வடுவாக எப்போதும் நிலைத்திருக்கும். 2007ம் ஆண்டு யுத்தம் தொடங்க மக்களும் இடம் பெயரத்தொடங்கி விட்டனர். படிப்படியாக ஒவ்வொரு நிலங்களையும் இராணுவத்தினர் சுவைக்கத்தொடங்கினர். மக்களும் இடம்பெயருவதை நிறுத்திக்கொள்ளவில்லை தொடர்ந்து நடக்கத்தொடங்கினார்கள். யுத்தம் மக்களை நெருங்கத்தொடங்கியது. இதனால் மக்கள் முள்ளிவாய்க்கால் கரையோரப்பகுதியில் புகுந்து கொண்டார்கள். இதற்கிடையில் எத்தனையோ கொடூரமான சம்பவங்களை கடந்து இறுதியாக இந் நிலத்திற்குள் புகுந்திருக்கின்றனர். இந்த நிலமும் அவர்களை விட்டுவைக்கவில்லை. நாளுக்கு நாள் அவர்களை கொலை செய்யத் தொடங்கிற்று. இரத்த வெள்ளத்தில் மக்கள் மிதக்கத்தொடங்கினர்.
சர்வதேசம் காப்பாற்றும், இந்தியா காப்பாற்றும் என எண்ணியிருந்த மக்கள் இறுதியில் தமது சொந்தங்களையும் உறவுகளையும் பறிகொடுத்தனர். இந்த குறுகிய நிலத்தில் லட்சக்கணக்கான மக்கள் அடைக்கப்பட்டு இரசாயனக்குண்டுகள், விமானத்தாக்குதல்கள், கடல்வழி தாக்குதல்கள் போன்றவற்றினால் மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். இறுதியில் இந்த யுத்தத்தில் மிகுதியானவர்கள் மீட்கப்பட்டு நலன்புரி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இன்று சொந்த நிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று முள்ளிவாய்க்காலில் அழிப்பு நடந்த தடயங்களை காணவில்லை. புதியபுதிய கட்டிடங்களும் சுற்றுலா மையங்களும். புத்த விகாரைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. என்னதான் காலத்தினுடைய மாற்றங்கள் நடந்தாலும் தமிழ் மக்களின் ஒரு அழியாத வடுவாக முள்ளிவாய்க்கால் படிந்திருக்கும்.
இன்றும் முள்ளிவாய்க்கால் பற்றிய மறக்க முடியாத சில கதைகள்...
பாக்கியம் - யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த போது எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்ததால் நாங்கள் அனைவரும் வெளியில் நடமாட முடியாது. பதுங்கு குழிகளுக்குள்ளே ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. நான் இருந்த பதுங்குகுழிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழிக்குள் சிறுவர்கள் அழுகின்ற சத்தம் எனக்கு கேட்டது. எங்கோ சென்ற இந்தச் சிறார்களின் தாயார் மீண்டும் திரும்பியிருக்கவில்லை. இதனால் தனிமையில் இருந்த சிறார்கள் அச்சத்தில் அழுதுகொண்டேயிருந்தனர்.
இறுதியில் அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்வதற்கு நாம் முடிவெடுத்த போது கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக இருந்த அந்தச் சிறார்களையும் கூட்டிக் கொண்டு சென்றோம். நான் கூட்டிச் சென்றிருந்த சிறார்களில் பெண் சிறுமி தனக்கு தெரிந்த ஒருவரை வழியில் கண்டு அவருடன் சென்றுவிட்டார். பின்னர் இளம் சிறுவன் என்னுடன் இருந்தான். நாங்கள் அனைவரும் நந்திக்கடல் நீரேரியைக் கடந்து ஸ்ரீலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்காக காத்திருந்தோம். திரும்பும் திசை எல்லாம் துப்பாக்கிச்சன்னங்கள். இதனால் நாம் நிமிர்ந்து நடக்க முடியவில்லை. ஊர்ந்து ஊர்ந்து மெதுவாகச் செல்ல வேண்டியிருந்தது. நாம் இறுதியாகப் பயணித்த சில கிலோமீற்றர் தூரம் வரை இறந்த உடலங்கள் பரவிக்காணப்பட்டன. இவ்வாறு நாம் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்த போதும் கூட எம்முடன் பயணித்த சிலர் துப்பாக்கி ரவைகளால் பதம் பார்க்கப்பட்டு மிக மோசமாகக் காயமடைந்தனர். அவர்களை காவிச் செல்ல முடியாதிருந்ததால் அவர்களை அப்படியே அதே இடத்தில் விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவ்வாறு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி ரவை ஒன்று சிறு பிள்ளை ஒருவரின் தலையைப் பிளந்து கொண்டு சென்றது. இதனை நான் நேரில் பார்த்தேன். அந்தப் பிள்ளை அந்த இடத்திலேயே இறந்து விட, தாயார் மிகவும் வேதனையுடன் தனது பிள்ளையின் உடலத்தை அப்படியே போட்டுவிட்டு நடக்க வேண்டியிருந்தார்.
சர்மிளா - நான் தற்போது கையில் வைத்திருக்கும் இந்தச் சிறுவன் வன்னியில் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது அதாவது நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பி வருவதற்கு மூன்று நாட்களின் முன்னர் பிறந்திருந்தான். அந்த நாளன்று, பெப்ரவரி 10 - 2009 எம்முடன் இணைந்து 60 குடும்பங்கள் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றோம். எம்மைச் சூழ யுத்தம் தீவிரம் பெற்று நடந்து கொண்டிருந்தது. இதனால் நாம் பதுங்குகுழிக்குள் பாதுகாப்புத் தேடினோம். நான் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றேன். எனது மகன் பிறந்த கையோடு, நான் மீண்டும் எனது குடும்பத்தவர்களுடன் இணைந்து கொண்டேன்.
வைத்தியசாலையில் பெருமளவான நோயாளிகள் நிறைந்து காணப்பட்டதால், என் போன்றவர்கள் மிக விரைவாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். நாங்கள் இறந்து கிடந்த உடல்களைக் கடந்து மூன்று நாட்களாக நடந்து இறுதியில் இராணுவக் கட்டுப்பாட்டை அடைந்தோம். நாங்கள் புலிகளின் நிலைகளிலிருந்து சில மைல்கள் தூரம் நடந்து சென்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அடைந்தோம். பின்னர் அங்கிருந்து, காடுகளின் ஊடாக பேரூந்துகளில் ஏறுவதற்காக நடந்தோம். நான் நடந்து சென்ற முழுத்தூரமும், சில நாட்களின் முன்னர் பெற்றெடுத்த அந்தக் குழந்தையை கூடை ஒன்றில் பாதுகாப்பாக வைத்து எடுத்துச் சென்றேன். நாங்கள் ஓமந்தையைச் சென்றடைந்த போது இராணுவத்தினர் பெருமளவான மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கவில்லை. இதனால் நாங்கள் குளிர் நிறைந்த அந்த இரவில் அந்த வீதியிலேயே படுத்துறங்க வேண்டியிருந்தது. எனது குடும்பத்தவர்களைப் பாதுகாக்குமாறு நான் இறைவனை மன்றாடினேன். அத்துடன் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பிரார்த்தித்துக் கொண்டேன்.

நன்றி
நம்தேசம்
நம்தேசம்
No comments:
Post a Comment