யாழ்.மாநகர சபையில் கடமையாற்றி பதில் தொழிலாளர்கள் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கான நிரந்த நியமனம் வழக்கக் கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 8 வருடங்களுக்கு மேலாக யாழ்.மாநகர சபையில் கடமையாற்றிவரும் குறித்த தொழிலாளிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி புறக்கணிப்பிற்கான உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மேற்படி நியமனம் வழங்குவதில் அரசியல் தலையீடு இருந்தாகவும், அதனால் தான் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்.மாநகர சபையின் பிரதான வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த தொழிலாளிகள் தமது கைகளில் யாழ்.மாநகர ஆணையாளருக்கு எதிரான கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் தாங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment