பெண்ணின் கணவர் லண்டனில் மாணவர் விசாவில் சென்று
தற்போது இரு வருடங்கள் வேலை செய்யும் தகுதியைப் பெற்று வேலை செய்து வருவதாகத் தெரியவருகின்றது.
மானிப்பாய்ப் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவருக்கு தவறான முறையில் குழந்தை பிறந்துள்ளது. இக் குழந்தையை அப் பெண் இன்னொரு குடும்பத்திடம் கையளிக்க முற்பட்ட போது கணவரின் தாயால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார்.
இந் நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் பெண்ணிற்கும் லண்டன் மாப்பிளைக்கும் திருமணம் நடந்ததாகவும் தனது அயல் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்ததாகவும் தெரியவருகின்றது. தனது தாயின் வீட்டில் தங்க வைத்து வெளிநாடு திரும்பிய கணவரிடம் குறித்த பெண், மாமியாருடன் இருக்க முடியாது என முரன்பட்டும் கணவரின் தந்தை தன்னுடன் தவறாக நடக்க முற்படுகின்றார் என்றும் கணவரிடம் கூறி தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார் பெண்.
இந் நிலையில் கடந்த மாதம் இந்த இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக மாமியாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மாமியார் பெண்ணின் அக்கா வீட்டை முற்றுகையிட்டுள்ளார். இருந்தும் குறித்த பெண்ணைக் காட்டாது அக்கா துரத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து பெண்ணின் கணவரின் நண்பர்களும் மாமியாரும் அப் பெண்ணின் அக்கா வீட்டுக்குள் புகுந்து தேடியபோது அங்கு அப் பெண்ணைக் காணவில்லை.
கணவர் அப் பெண்ணிற்கு பல தடவைகள் தொலைபேசி எடுத்தும் பெண் சரியான முறையில் பதிலளிக்காது கணவரின் தந்தை தன்னுடன் தவறாக நடக்க முற்படுவதாகவும் இதனால் தன்னை மாமியார் தொல்லைப்படுத்துவதால் தான் இன்னோர் இடத்தில் ஒளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த ஞாயிறு கிடைத்த தகவலையடுத்த மாமியாரும் கணவரின் உறவுகளும் மூளாய்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணைக் கண்டு பிடித்த போது அப் பெண் குழந்தை ஒன்றிற்கு தாயாகி இருப்பதை நேரில் பார்த்தள்ளனர்.
அத்தடன் தான் இருந்த வீட்டின் உரிமையாளர்களான தம்பதிகளுக்கு அந்தக் குழந்தையைக் கொடுத்துள்ளார் . அக் குழந்தை அந்த வீட்டாருடையது என வீட்டு உரியையாளரும் பெண்ணும் தெரிவித்த போது அயலில் இருந்தவர்கள் அதை மறுத்து அந்தக் குழந்தைக்கு பெண்தான் தாய் எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசாரை அனுகவுள்ளதாக கணவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் குறித்த பெண்ணுக்கும் அக்காவின் கணவருக்கும் இடையில் திருமணம் புரிவதற்கு முன் நீண்டகாலமாகத் தொடர்புகள் இருந்ததாகவும் இதனால் பல தடவைகள் பெண்ணின் அக்கா கணவரை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment