பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப்போராட்டமான அடையாள உண்ணா மறுப்புப்போராட்டம் இன்று காலை 10.00 மணிக்கு பிரான்சின் பிரசித்தி பெற்ற இடமாக விளங்கும் பிரான்சின் மக்கள் விடுதலைச் சுதந்திரத்தேவி நினைவுச் சிலை அமைக்கப்பட்டசு சுépரடிடஙைரந ஏன்னும் இடத்தில் ஈகைச்சுடர் ஏற்றலுடனும், அகவணக்கத்துடனும் ஆரம்பமாகியது. தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. ப.பாலசுந்தரம் அவர்கள் தொடக்கிவைக்க ஈகைச்சுடரினை வீரவேங்கை கப்ரன் ரூபன் அவர்களின் சகோதரி ஏற்றி வைக்க, மாவீரர் 2ம் லெப் இளந்தேவனின் சகோதரர் மலர்வணக்கம் செய்திருந்தார்.
இன்று 10.05.2014 முதல் எதிர்வரும் 18.05.2014 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை அடையாள கவனயீர்ப்பு உண்ணாமறுப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நாளில் காலநிலை மாற்றத்தால் தொடர் மழையும் குளிருக்கும் மத்தியில் எம்மவர்கள் இப்போராட்டத்தை நடாத்திபல வெளிநாட்டு மற்றும் பிரெஞ்சு மக்களின் கவனத்தை ஈந்திருந்தனர்.
2009 ம் ஆண்டு இந்தகாலப்பகுதியில் எமது மக்கள் சிங்களவனின் எறிகணை நெருப்பு மழைக்குள், கொத்துக்கொத்துகளாக சிதறியதும்.
சர்வதேசம் பார்த்திருக்க எமது மக்கள் கதறியழுதவைகளும், விட்டகண்ணீருக்கும் அன்று விடைகிடைக்காத போதும் இன்று சர்வதேசம் ஈழத்தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஆதரவு காட்டி வருவதும் சிங்கள தேசத்திற்கு பெரும் தலையிடியையும் கிலியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைக்காகவும், நியாயமான ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சர்வதேசம் எங்கும் பேரணிகள் மூலம் தொடர் போரட்டங்களாலும் அதன் அரசுகளின் கதவுகளை தட்டி வருவதும் 2009 ம் ஆண்டும் அதன் பிற்பாடும் இன்னும் தீவிரம் கொண்டுள்ள புலம் பெயர் தமிழீழ மக்களின் சனநாயக அரசியல் போராட்டங்களே சிங்களத்தை கிலிகொள்ள வைத்துள்ளது.
அதனால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பிவிடும் செயற்பாடுகளையும் செய்யமுனைகின்றது. அதன் ஒரு செயற்பாடே செத்துபோனவனையும் தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் இட்டு நீதிக்கானபோராட்டத்தை முன்னெடுக்கும் தமிழர் அமைப்புகளையும், தமிழர் புனர்வாழ்வு அமைப்புகளையும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக காட்டுவதுமாக இருக்கின்றது. இது மட்டுமல்ல இன்னும் பல்வேறு தடைகளையும், சிங்களம் போடலாம் தனது நாட்டில்தான் சனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது மட்டுமல்லாது புலத்தில் சனநாயகத்தை மதிக்கின்ற போற்றுகின்ற நாடுகளில் அங்கு வாழும் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முடக்குவதற்கு போடும் முட்டுக்கட்டைகள் எல்லாமே போராடாமல் இன்னும் இருப்பவர்களையும், போராடதூண்டுகின்ற செயற்பாடு என்பதை சிங்களம் விரைவில் தெரிந்து கொள்ளும்.
சர்வதேசம் எங்கும் தமிழின அழிப்பு நாள் மே 18ம் நாளில் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ்மக்கள் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரிமைக்குரலும், நீதிக்கான கோசத்தையும், தமிழினத்தின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி பிரான்சில் தமிழ்மக்கள் அதிகம் வாழும் நகரங்கள் தோறும் தமிழர் அமைப்புகள் பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 18ம் நாள் மதியம் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பேரணியில் அனைத்து தமிழ்மக்களை கலந்து கொள்ளுமாறும். கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உப கட்டமைப்புகளும் மற்றும் தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் கேட்டுக்கொள்கின்றது.

No comments:
Post a Comment