September 2, 2016

மலேசியாவில் மஹிந்த ராஜபக்ஷயின் உருவ பொம்மை எரிப்பு??

மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நேற்றைய தினம் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்று பலத்த எதிர்ப்பாக மலேசிய தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

புத்ரா உலக மையத்தில் நடைபெறும் ஆசிய – பசுபிக் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிற்கு தலைமையேற்று மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று மஹிந்தவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மலேசிய தமிழர்கள், இன்று அவர் புத்ரா உலக மாநாட்டு மையத்தில் உள்ளார் என்ற தகவல் மலேசிய தமிழர்கள் மத்தியில் பரவியதையடுத்து மலேசியத் தமிழர்கள் குறித்த கட்டடத்தை முற்றுகையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாக மண்டபத்தை சுற்றி பாதுகாப்பு நிமித்தம் மலேசிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை “இலங்கையின் இடி அமீனே” ”ராஜபக்ஷ மலேசியாவை விட்டு ஓடு ஓடு” என்ற பதாகைகளை ஏந்தியவாறு, ஆக்ரோசமான கோஷங்களையும் மலேசியத் தமிழர்கள் எழுப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.





No comments:

Post a Comment