46 வயதான இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிரகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த நபரின் இரு சகோதரர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இவரது உயிருக்கும் ஆபத்து இருப்பதால் அவர் நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment