அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-10ம் திகதி சனிக்கிழமை காலை-07.30 மணிக்குப் பூங்காவனத் திருவிழாவும், 11ம் திகதி காலை-07 மணிக்குக் கைலாச வாகனமும், 14ம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 15ம் திகதி வியாழக்கிழமை காலை-07மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 16ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை- 5 மணிக்கு மெளனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஆலய மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment