September 1, 2016

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி;பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்!

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தொடா் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா்.


பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர் கட்சி தலைவா் வழங்கிய உறுதிமொழி நிறைவேறாத நிலையில் பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தங்களின் கவனயீா்ப்பு போராட்டத்தை இன்று புதன் இரவு முதல் ஆரம்பித்துள்ளனா்.

இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது

.பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டதை அடுத்து இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து ஐந்து நாட்களாக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால வரையறை இன்று புதன் கிழமை 31-08-2016 உடன் நிறைவடையும் நிலையில் பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. . இதனை ஏற்றுக்கொள்ளாத பரவிபாஞ்சான் மக்கள் தங்களுடைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி மீண்டும் தங்களுடைய கவனயீா்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா்

எதிர் கட்சி தலைவா் அளித்த வாக்குறுதியின் படி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் படைத்தரப்பு ஏற்கனவே தீா்மானித்ததன்படி மூன்றரை ஏக்கா் காணியை மட்டுமே விடுவித்துள்ளனா் அதுவும் பொது மக்களிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை அரச அதிபரிடம் ஒப்படைத்துள்ளனா்.

சம்மந்தன் ஜயாவின் உறுதிமொழியை நம்பி நாம் எமது போராட்டத்தை கைவிட்டிருந்தோம் ஆனால் அவா் கூறியபடி எதுவும் இடம்பெறவில்லை எனவே நாம் எமது தொடா் கவனீயீா்ப்பு போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனா்.
15 குடும்பங்களுக்கு சொந்தமான இன்னும் பத்து ஏக்கா் காணி விடுவிக்க வேண்டும் எனவே அந்தக் காணிகளும் விடுவிக்கும் வரை நாம் தொடா் கவனயீா்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பரவிபாஞ்சானில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனா்.








No comments:

Post a Comment