August 31, 2016

மாலத்தீவை கைப்பற்றிய தமிழர் படை – இந்தியா, அமெரிக்காவிடம் உதவி கேட்ட மாலத்தீவு அதிபர்!!

அதிசயம் ஆனால் உண்மை.. தமிழர் படை ஒன்று மாலத்தீவு நாட்டை கைப்பற்றியது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இது உண்மை.


இப்போது அல்ல 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இது நடந்தது.  400 பேர் கொண்ட தமிழர் படை மாலத்தீவு நாட்டை அதிரடியாக கைப்பற்றியது.

அந்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமையகம் வீழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட  2 ஆயிரம் பேரை கைதிகளாக பிடித்த ஈழத் தமிழர்களை கொண்ட அந்த படை, அப்போதைய அதிபர் மம்மூன் அப்துல் கரீமை சரணடைய வலியுறுத்தியது. இந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால் அவர் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் உதவி கோரினார்.

ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் உதவாமல் கை விரித்தனர்.  ஆனால் அப்போதைய இந்திய பிரதமர் உடனடியாக 1600 ராணுவ வீரர்களை கொண்ட ராணுவ கப்பலை அனுப்பினார்.

இதனால் அங்கிருந்து அந்த படை தப்பிச் சென்றது. இலங்கையில் வசித்த மாலத்தீவு முன்னாள் அதிபரின் ஆதரவாளர் ஒருவர், அப்போதைய மாலத்தீவு அதிபரின் ஆட்சியை கவிழ்பதற்காக தமிழ் போராட்டக்குழு ஒன்றின் உதவியை நாடி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது பின்னர் தெரியவந்தது.

No comments:

Post a Comment