August 12, 2016

இராணுவத்தினரின் உணவகத்திற்கு மூடுவிழா??

முல்லைத்தீவுக்கு தீடிர் விஜயம் மேற்கொண்ட இராணுவத்தளபதி கிரிஷாந்த டி சில்வா பொது இடங்களில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.


இதன் அடிப்படையில் முல்லைத்தீவு நகர கடற்கரையில் இயங்கிய இராணுவத்தினரின் முல்லை கபே என்னும் உணவகத்தை மூடும்படி கட்டளையிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த உணவகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவத்தினரால் நடாத்தப்படும் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பன இராணுவ முகம்களை அன்மித்த பொது இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment