அகுரஸ்ஸ மாரம்ப மினிபோகொட பிரதேசத்தில் பலத்த வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் கணவன் – மனைவி ஆகிய இருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 5 பிள்ளைகள் உண்டு. காணி தகராறு காரணமாக இவர்களது மூன்றாவது மகன் ஹேவா பெல்பகே ஆனந்த என்பவரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளினாலும் 1990 துரித அம்புலன்ஸ் சேவையின் ஊடாகவும் உரிய நேரத்தில் பெற்றோர் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment