றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் இன்று குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளார். இவர், மங்கோலியரான CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக இன்று தனது முதலாவது போட்டியை சந்திக்கிறார்.
. தனது 18 ஆவது வயதில் ஜேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தர்மலிங்கம் கட்டார் நாட்டின் சார்பில் விளையாடுகிறார்.
பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார்.
உலகத்தரத்தில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழு முறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை ஜேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.
கடந்த ஜூலை 7 ஆம் திகதி அன்று நடந்த Light Welterweight பிரிவில் மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino என்ற வீரரை 3-0 என்ற புள்ளியில் வென்று றியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment