அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, 26 வருட நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று 12. 00 மணியளவில் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், ஆலயத்திற்கு அருகிலுள்ள நினைவுத் தூபிக்கு இன்று காலை சென்ற மக்கள், உயிரிழந்த தமது உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிராத்தித்தனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல் காரணமாக 1990 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனை கிராமத்தை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ணமிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பொதுமக்களின் அகதி முகாம்களுக்குள் புகுந்த இராணுவத்தினரும் ஊர்காவற்படையினரும் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 155 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.
வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒருசில படுகொலைகளாக வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை, அதிரடிப்படை மற்றும் மற்றும் ஊர்காவற்படையினால் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி மல்வத்தை இராணுவத்தினரும் ஊர்காவற்படையினருமாக சுமார் 30 பேரில் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் படுகொலை செய்தனர்.
அதேவேளை, 26 ஆம் திகதி வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் ஊர்காவற்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
29 ஆம் திகதி ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயியுள்ளனர். அதே மாதம் 12 ஆம் திகதி வீரமுனை அகதி முகாமில் புகுந்த ஊர்காவற்படை வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது.
இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
வீரமுனையில் 600 வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டன.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரை வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600 க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வீரமுனையில் தஞ்சமடைந்திருந்த சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment