July 29, 2016

மஹிந்தவை கொலை செய்ய முயற்சி! பிரபல பாடகிக்கு CID அழைப்பு!

பிரபல பாடகி சமிதா எரந்ததி முதுன் கொட்டுவவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றவருக்கு உதவியதாக குற்றச்சாட்டின் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு கொழும்பிற்கு வந்த விடுதலை புலி உறுப்பினர் தங்குவதற்கு இடம் வழங்கியதாக பாடகி சமிதா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்தவே குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

விடுதலைப்புலி சந்தேகநபர்கள் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஊடாக, சமிதாவை அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment