July 18, 2016

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு அருகதையில்லை – டிலான் பெரேரா!

துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்குக் காரணமான அமெரிக்காவுக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதி கிடையாது என்று சிறிலங்கா அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது. தற்போது பயங்கரவாத தடைச்சட்டம்  நடைமுறையில்இல்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோருவதற்கு அமெரிக்காவுக்கு  தகுதி கிடையாது.

துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்கு காரணமான அமெரிக்கா, சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக எவ்வாறு கேள்வியெழுப்ப முடியும்,

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதை எங்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில் அனைத்துலகத்துக்கு  கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.

ஆனால், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சிக்கு அமெரிக்க அழுத்தம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment