July 21, 2016

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானம் கிடைக்கவில்லை – சிறிலங்கா அரசு தகவல்!

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும், குறைவாகவே வரி வருமானம் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் நிதி அமைச்சர் சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நிதியமைச்சரின் சார்பில், நாடாளுமன்ற அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, 2016ஆம் ஆண்டுக்கான நடுஆண்டு நிதிநிலை குறித்த அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினால் 473 பில்லியன் ரூபா வரி வருமானமாக பெறப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 19.6 வீதம் அதிகமாகும்.

எனினும், கடந்த ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான இந்த நான்கு மாத காலப்பகுதியில், 495 பில்லியன் ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது. ஆனால் 441 பில்லியன் ரூபாவையே திரட்ட முடிந்துள்ளது.

வரியல்லா வருமானமும், 8.8 வீதத்தினால் குறைந்துள்ளது. முதல் நான்கு மாதங்களில் வரியல்லா வருமானமாக, 31 பில்லியன் ரூபாவே திரட்டப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment