June 15, 2016

பனாமா ஆவணத்தில் வெளியிடப்பட்ட மோசடிக்காரர்களை பாதுகாக்க பிரதமர் முயற்சி!

பனாமா ஆவணத்தில் வெளியிடப்பட்ட  மோசடிக்காரர்களை பாதுகாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூட்சுமமாக செயற்பட்டு வருகின்றார்.
உயர் நீதி மன்றம் மத்திய வங்கியின் ஆளுநருக்கு வெள்ளை பூசவில்லை என்று  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்   தெரிவித்தார்.

 ரணில் – மைத்திரி கூட்டாட்சி  அரசாங்கத்தின் எதிர்காலம் மிகவும் தீர்க்கமான நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொரளையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஸ்ரம பௌத்த நிலையத்தில்   இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுயைிலேயே     முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெறகின்றன. பாரிய நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவற்றில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கின்றனரே தவிர ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து யாரும் விசாரணைக்கு அழைக்கப்படுவதில்லை.

மத்திய வங்கி ஆளுநரின் விடயத்தில் இனி பொறுமைக்காக்க முடியாது.  அதே போன்று இன்று நாட்டின் பொருளாதாரம் படுமோசமான பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையில் 1945 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போதைய நல்லாட்சியில் தான் நடைமுறை கணக்குகளில் திறந்த கொள்கையை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை வெளிப்படையாக கூறி விட்டார்.

இதனால் நாட்டிலிருந்து எத்தொகையானாலும் வெளியில் கொண்டு செல்ல முடியும். இதன் பின்னணி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பனாமா ஆவணத்தில் வெளியிடப்பட்ட இலங்கையோர்களுக்கான பெயர் பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது செயற்படுகின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் முரணான நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் அரசாங்கத்திற்குள் சிக்கல் நிலை ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment