June 15, 2016

காணாமல்போனோர் – அரசியல் பிரச்சனைக்கு தீர்வில்லாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை:எம்.கே.சிவாஜிலிங்கம்!

காணாமல்போனோர், அரசியல் கைதிகள் உள்ளிட்டவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீதிமன்றத்தால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டால், அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பித்து, 3 கிழமைகளுக்குள் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

ஆனால் இங்கு அரசியல் கைதிகள் தொடர்பில் அவ்வாறு நடைபெறாமல், அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

காணாமல்போனோர், அரசியல் கைதிகள் உள்ளிட்டவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது’ எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment