June 24, 2016

சட்ட விரோதமாக தங்கி இருப்போருக்கு அனுமதி: ஒபாமா திட்டத்தை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு முறையான அனுமதி வழங்கும் அதிபர் பராக் ஒபாமாவின் திட்டத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


நான்கு நீதிபதிகள் ஒபாமாவின் திட்டத்துக்கு ஆதரவாகவும், நான்கு நீதிபதிகள் எதிராகவும் முடிவெடுத்ததால், அந்த சீர்திருத்த நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது.

சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 40 லட்சம் பேரை நாடுகடத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றும் உரிமம் வழங்க ஒபாமா நிர்வாகம் விரும்பியது.

ஆனால், நாடாளுமன்ற அதிகார வரம்பைத் தாண்டி, நிர்வாக ரீதியாக ஒபாமா எடுக்க விரும்பிய நடவடிக்கை, அதிகார வரம்பை மீறிய செயல் என்று கூறி, அமெரிக்காவின் 26 மாகாணங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால், ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் காலகட்டத்தில் அவரது திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டன், ஏற்க முடியாதது என்று நிராகரித்துள்ளார்.

No comments:

Post a Comment