June 24, 2016

இலங்கையில் 50,000 ஹெரோயின் போதைப் பொருள் அடிமையாளர்கள்:ஓர் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் 50,000 ஹெரோயின் போதைப் பொருள் அடிமையாளர்கள் வாழ்கின்றார்கள் என தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. 200,000 பேர் கஞ்சாப் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.


ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரையில் ஆண்டு தோறும் போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்படுத்துவோர் பற்றிய சரியான புள்ளி விபரத் தகவல்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மீட்கப்படும் அதிகளவான போதைப் பொருட்கள் உள்நாட்டு நுகர்விற்கானது அல்ல எனவும் அவை வெளிநாட்டில் பயன்படுத்துவதற்கானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தப் போதைப் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment