June 16, 2016

இலங்கை அகதிகள் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க அச்சே தயார்!

அச்சேயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளின் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க இந்தோனேஷிய அரசாங்கம் முன்வந்துள்ளது,


இதன்படி குறித்த படகு தமது பயணத்தை தொடர்வதற்காக எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றை வழங்க தயாராகவுள்ளதாக அச்சே ஆளுநர் செய்னி அப்துல்லா தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியிலேயே இந்தப்படகு இந்தோனேஷியாவில் நிர்க்கத்திக்கு உள்ளானது என்று நம்பப்படுகிறது. இந்த படகில் 44 பேர் பயணம் செய்கின்றனர். இதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படகு கடந்த 11 ஆம் திகதி அச்சேயில் தரை தட்டியது. எனினும் இவர்கள் இலங்கையில் இருந்தா? அல்லது தமிழகத்தில் இருந்தா? புறப்பட்டார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை

No comments:

Post a Comment