June 24, 2016

நீதி தொடர்பில் அரசு தவறான அணுகுமுறை! சிவில் சமூக பிரதிநிதிகள் குற்றச்சாட்டு!!

இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகவும் பொறுப்புக்கூறலிற்கான பொறிமுறையை தாமதிக்கின்றது என்று எழுபது பேர் கையெழுத்திட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 17 மாதங்கள் கடந்துள்ளன. ஆனாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றும் இதில் எந்த முன்னேற்றமும் காணப்படாமை குறித்த தமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்துவதாகவும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சாரம் காரணமாக இலங்கையில் மீண்டும் மீண்டும் வன்முறைகள் இடம்பெறுவதாகவும் இந்த கலாச்சாரத்திற்கு முடிவு காணப்படாமல் நிலைமாறுகால மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் வெற்றியளிப்பது கடினம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு  அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பெரும்பாலோனார் காணமல்போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அதற்கு சுயாதீனமான – நம்பத்தன்மை மிக்க அமைப்பு அவசியம் என்றும் அந் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment