June 15, 2016

மீண்டும் உயிர்த்து எழும் சாலாவ இராணுவ முகாம்!

கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் மீண்டும் புனரமைக்கப்படும் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறினார்.


கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

சாலாவ இராணுவ முகாம் மீண்டும் அங்கே நிர்மாணிக்கப்படும் எனவும் ஆனால், அங்கு ஆயுத கிடங்கு அமைக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த வீடுகளில் 210 வீடுகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாகவும், 278 வீடுகள் புனர் நிர்மாணம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, 2 பாலர் பாடசாலைகள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பகுதியில் உள்ள வைத்தியசாலையும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொஸ்கம சாலாவ தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் தைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை இராணுவம் மேற்கொண்டு வருவதாகவும் இதன்போது இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறினார்.

இதேவேளை, குறித்த பகுதியில் வெடி பொருள் சிதறிய பகுதியில் புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment