September 30, 2015

ஊடகங்களுக்கான அழைப்பு - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET) ஏற்பாடு!

ஐக்கியநாடுகள் சபையின் 30 ஆவது மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் இம்முறை சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான
பரிந்துரைகளும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை முறைகளும் அதன் அர்த்தப்பாடுகளும் இன்னும் சில நாட்களில் வெளிவரும். சிறீலங்கா அரசானது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்புவிசாரணை முறையையும் நிராகரித்திருப்பதுடன் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்வதற்கு பல பிரயத்தனங்களை யெனீவா கூட்டத்தொடரை நோக்கி முன்னெடுத்துள்ளது.

ஆகவே சிறீலங்கா அரசின் முன்னெடுப்புகளை இராஐதந்திர வழியில் முறியடிக்கும் பணிகளில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் செயற்பாட்டளர்கள் மிக முனைப்போடு செயற்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பல இராஜதந்திரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது நிலைப்பாட்டைக் கூறிவருகின்றனர்.

அத்துடன் எமது நீதிக்கான போராட்டத்தை வலுவடையச் செய்யும் நோக்கில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் மன்றத்திற்குள் இரு கருத்தரங்குகளையும் (Side Events) ஏற்பாடுசெய்துள்ளனர்.

30. September 2015 அன்று ஐக்கியநாடுகள் மனிதஉரிமை மன்றத்தின் சிறீலங்கா தொடர்பான அறிக்கையும் தமிழ்ச் சமூகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

முகவரி :

Wednesday, 30th September 2015
17h00 – 18h00 – Room XXIII
UNOG, Palais des Nations

01. Oktober 2015 அன்று சிறீலங்காவில் தமிழ் பென்களின் பாதுகாப்பும், எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் மற்றொரு கருத்தரங்கும் இடம்பெறவுள்ளது.

முகவரி:

Thursday, 1st October 2015
13h00 – 15h00 – Room XXI
UNOG, Palais des Nations

இதில் தாயகம், தமிழகம் மற்றும் பல வேற்றின பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.

No comments:

Post a Comment