September 28, 2015

பணிப்பாளர்களாக வைத்தியர் நந்தகுமாரன் மற்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி நியமனம்!

வடமாகாண சுகாதாரத்துறையிலுள்ள பெரும்பாலான தலைமை அதிகாரிகளுக்குரிய பதவிகள் நீண்டகாலமாக வெற்றிடமாகவே காணப்பட்டு வந்த நிலையில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளராக வைத்திய
கலாநிதி கனகராஜா நந்தகுமாரனும்,  யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவிக்கு வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்திய மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய கலாநிதி திரு கனகராஜா நந்தகுமாரன், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ நிர்வாகத்துறை முதுமாணிப்பட்டதாரியுமாவர்.
வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்திய மூர்த்தி, கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலயத்தின் பழையமாணவர், யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ நிர்வாகத் துறை முதுமாணிப பட்டதாரியுமாவர்.
மேற்படி நியமனங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சின் செயலரினால் வழங்கப்பட்டுளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment