September 4, 2015

புதுக்குடியிருப்பில் தாய்ப்பாலூட்டல் விழிப்புணர்வு பேரணி(படங்கள் இணைப்பு)

தாய்சேய் நலன்களை பேணம் பொருட்டு விழிப்புணர்வு பேரணி ஒன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்றது.
 வடக்கு மகாண சபையின் கீழ் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்
பணிமனையின் ஏற்பாட்டில் வேல்ட் விசன் நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்கியது.
இதில் பெருமளவான தாய்மார்கள், யுவதிகள், சமூக நலன் விரும்பிகள் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரிகள் வேல்ட் விசன் திட்ட அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் தாய்ப்பாலூட்டல் மற்றும் போஷணை மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கபட்டதுடன் உரைகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment