September 28, 2015

வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை பதவி வகிப்போருக்கும் தீர்வையற்ற வாகனம் பெறக்கூடிய வாய்ப்பு!

வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை பதவி வகிப்போருக்கும் தீர்வையற்ற வாகனம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்று நாபீர் பௌன்டேசனின் தலைவரும் நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர்தெரிவித்தார்
.
 இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
இலங்கைக்கு தேசிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் வழிகளில் வெளிநாட்டில் தொழில்புரியும் சுமார் 20 லட்சம் பேரின் உழைப்புஎன்பது மிகப்பிரதானமானதாகும்ஆனால் குறித்த இந்த பணம் புரட்டிக்கொடுக்கும் இயந்திரங்கள் இயந்திரங்களாகவேநோக்கப்படுகிறதுஇலங்கை அரசாங்கத்தினால் இவர்கள் தொடர்பில் பாரிய கரிசணை காட்டப்படுவதில்லைநாட்டில் நல்லாட்சிநிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் தொழில்புரியும் சுமார் 20 லட்சம் பேரின்உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படவேண்டும். இலங்கையில் பணிபுரியும் உயர்நிலை உத்தியோகத்தர்களுக்கு தீர்வையற்றவிதத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது போல் வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலைஉத்தியோகத்தர்களுக்கும் தீர்வையற்ற விதத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

அதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் நல்லாட்சியைமேற்கொள்ளும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment