September 24, 2015

தாயின் மரண வாக்குமூலத்தை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இருவர் எரியூட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மரண வாக்குமூலத்தினை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.காவத்தை கொட்டகெத்தன நயனா நில்மினி மற்றும் காவிந்தியா சத்துரங்கி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,


நயனா நில்மினி, தன்னுடைய மகனிடம் தெரிவித்த மரண வாக்குமூலத்தை நிராகரிக்குமாறு வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரியிருந்த போதிலும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜின் வீரவர்தன முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்ததையடுத்து, அந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மனுதாரர்களினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய எல்.ஜீ.பிரேமவதி மற்றும் அவரது மகள் எச்.ஜீ.புஸ்பகுமாரி, ஆகிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு அவர்களுடைய சடலங்கள் எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment