September 7, 2015

நல்லுாரில் வயலீன் வாசித்துக் கொண்டிருந்தவருக்கு நடந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த பிரபல வயலின் இசைக் கலைஞர் உ.இராதாகிருஷ்ணன் நல்லூரில் நடைபெற்ற இசையரங்கு நிகழ்வில் வயலின் இசை நிகழ்வை நிகழ்த்திக் கொண்டிருந்த போது தீடீரெனக் காட் அட்ராக் (மாரடைப்பு)

ஏற்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்.போதானா வைத்தியாசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நல்லூர்க் கந்தன் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் அனுசரணையுடன் நல்லூர் இளங்கலைஞர் மன்றம் தினம் தோறும் மாலை 6.45 மணி முதல் 8 மணி வரை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கு நிகழ்வு நடாத்தி வருகிறது.
19 ஆவது திருவிழாவான இன்று ஞாயிற்றுக்கிழமை(06.9.2015)பிரபல வயலின் இசைக் கலைஞர் உ.இராதாகிருஷ்ணன் குழுவினரின் வயலின் இசையரங்கு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அவரது மகளான திருமதி.சைந்தவி நிஷாகரன் அவருடன் இணைந்து வயலின் இசையை வழங்கியதுடன்,அவரது மகன் இ.ரகுகுலன் மிருதங்க இசையையும் வழங்கினர்.
குறித்த வயலின் இசை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட சுமார் 5 நிமிடங்களில் இராதாகிருஷ்ணன் மாரடைப்பால் தாக்கத்துக்குள்ளாகி மயங்கிச் சரிந்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத அவரது உறவினர்களும், அங்கு கூடியிருந்த அவரது மாணவர்களும், இசை இரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட முருகன் அடியார்கள் பலரும் சம்பவ இடத்தில் கூடினர்.
உடனடியாக ஆலயத்தின் மேற்குப் பக்கமாகவுள்ள சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் அம்புலன்ஸ் வாகனத்தில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதே வேளை மாரடைப்பு இசைக் கலைஞருக்கு தற்போது தான் முதலாவது தடவையாக ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
பிந்திய தகவலில் படி அவர் நள்ளிரவு இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment