தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி 6 வது நாளாக மனித நேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை ஊடறுத்து லக்சம்புர்க் நகரை அண்மித்து உள்ளது . 6 வது நாள் மனித நேய
ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது .
இன்றைய நாளில் ஈருருளிப் பயணம் 102 KM கடந்து , பாதை மலைப்பிரதேசமாக விளங்கியதால் மிகவும் கடினமாக அமைந்ததை மனித நேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்த இளையோர்கள் தெரிவித்தார்கள் .இருப்பினும் தமிழின அழிப்புக்கு நீதியான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்ற அவாவுடன் ஐநா நோக்கிய பயணத்தில் தமது பங்களிப்பு எவ்வளவு கடினம் ஏற்பட்டாலும் தொடரும் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் மனித நேய ஈருருளிப் பயணம் லக்சம்புர்க், யேர்மனி,பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து சுவிஸ் நாட்டுக்கு சென்று எதிர்வரும் 21 ம் திகதி மாபெரும் ஐநா பேரணியில் இணைந்துகொள்ளும் .

No comments:
Post a Comment