August 23, 2015

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு (படம் இணைப்பு)

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் மேஜர் Abbas Ali Park பூங்காவில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற உள்ளது.


அழிந்து போகும் தமிழர் தாயாக மண்ணின் நினைவுகளை மீட்கும் தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு கனடிய மண்ணில் இளையவர்களால் அணிகளாக அணி வகுத்து மாபெரும் விளையாட்டு போட்டி நிகழ்வாக இமாதம் 30 ஆம் நாள் நடைபெறவுள்ளது.

தேசிய உணர்வோடு இந்த மண்ணில் எம் இளையவர்கள் வாழவும் தடைகளை வென்று வெற்றிகளை படைக்கும் தீரத்தை கற்றுக் கொள்ளவும் இந்த தடகள விளையாட்டை எம் இளையவர்கள் வாழ்விலும் உளவியல் வலிமைக்கான பயிற்சியாக கடைப்பிடிக்கும் முகமாக கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் கனடிய இளையோருக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தி கோடை விடுமுறை காலத்தில் கனடா வாழ் இளையோர் அனைவரையும் அணி திரட்டி நடத்தி வருகின்றனர்.

கனடிய மண்ணில் பிறந்தாலும் தமிழர் விளையாட்டுக்களை தமிழர் கலை கலாச்சார விழுமியங்களை தாங்கி நிற்கும் தமிழர்கள் நாங்கள் என உற்சாகமாக கிளித்தட்டு விளையாட அணி திரண்டு இருக்கும் அத்தனை இளையவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எங்கள் இளையவர்களின் தாயக உணர்வு கூடிய இந்த நிகழ்வை கனடா வாழ் அனைத்து தமிழ் மக்களும் அணி திரண்டு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன் வாருங்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தி இவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துங்கள் என வேண்டுகின்றேன்.

No comments:

Post a Comment