ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 32 தூதுவர்களும் இன்று காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் மற்றும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு கிழக்கு மாகாண பிரதம
செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் விஷேடமாக அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தியா, சவூதி அரேபியா, ஓமான், குவைத், குவைத், பஹ்ரைன், உட்பட 30க்கு மேற்பட்ட நாடுகளின் இலங்கைத் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மீழ் குடியேற்றம்,கைத் தொழில்,விவசாயம், கல்வி, மீன்பிடி, உல்லாசப்பயணத்துறை, வீதி அபிவிருத்தி, மற்றும் முதலீடுகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விரிவாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்து கொண்ட தூதுவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளினூடாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், வேலைவாய்ப்புக்கும், மற்றும் இதர தொழிநுட்ப அபிவிருத்திக்கும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் உறுதியளித்தனர்.
குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் மற்றும் சுபீட்சத்துக்காகவும் அனைவரும் ஒத்துழைக்குமாறு தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை பிரதம செயலாளர், முதலமைச்சின் செயலாளர், உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment