May 30, 2015

இந்தியரும் கலகம் விளைவித்தார்?வாதிடும் காவல்துறை அதிகாரி!

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் ,இந்திய சுற்றுலாப் பயணியும் கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ளார் இலங்கை காவல்துறையின்பிரதி தலைமை அதிபர் லலித் ஏ ஜெயசிங்க. கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கைது
செய்யப்பட்ட 130 பேரில் உள்ளடங்கும் இந்திய சுற்றுலா பயணியும் கலகத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
யாழ். துலைமை காவல் நிலையத்திலுள்ள பிரதி காவல்துறை அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 20ஆம் திகதி யாழ். நீதிமன்றத்துக்கு முன்பாக கூடியவர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு கற்கள் வீசி, வாகனங்களையும் உடைத்தனர். அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுவீசி கலகத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 130 பேரும் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே என காவல்துறையினர் கூறுகின்றனர்.
பாடசாலை சீருடையுடன் அங்கு எவரும் கைது செய்யப்படவில்லை. குழப்பத்தில் ஈடுபடாத எவரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் வாதிட்டார்.

No comments:

Post a Comment