May 29, 2015

இந்தோனேசியால் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு நடந்தது என்ன?

இந்தோனேசியா நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளை கொண்டிருந்த படகொன்று பற்றி தகவல்கள் இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது.


யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த இவர்கள் முதலில் இந்தோனேசியா சென்று முகாம்களில் தங்கியிருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொண்ட இப்படகில் சுமார் 65 பேர் வரையிலிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

தாம் அடைக்கலம் புகும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை தகவலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது உறவுகள் பின்னர் அவர்களது தொலைபேசிகள் செயலிழந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இறுதி வரை செயற்பட்டுக் கொண்டிருந்த படகின் மாலுமியின் செய்மதி தொலைபேசியும் கடந்த ஓரிரு நாட்களாக செயலிழந்திருப்பதாக உறவினர்கள் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாணசபையின் கூட்டமைப்பு சார்பு உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.

ஏற்கனவே மியான்மார் நாட்டிலிருந்து தப்பித்து வேறுநாடுகளில் அடைக்கலம் புக முற்பட்டுள்ள அகதிகள் நடுக்கடலில் அந்தரித்துக் கொண்டிருக்கும் நிலையினில் வடகிழக்கிலிருந்தும் அகதிகள் புறப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment