போரின் போது உயிர் நீத்த உறவுகளை
நினைவுகூர்வதற்காக கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த மத நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களை, சிவில் உடையில்
இராணுவப் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்தமைக்கான ஆதாரங்கள்
கிடைத்துள்ளதாக JDS என்ற அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்கள் ஒன்று கூடியிருந்த சந்தர்ப்பத்தில்
அவர்களை தமது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த ஒற்றர்களின்
புகைப்படங்களையும் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டதை நினைவுக்கூறுவதற்காக முதலாவது சமய நினைவேந்தல் நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், பௌத்த மதகுருமார்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
சுமார் ஆயிரம் பேர் வரை இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், உயிர் நீத்தவர்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட தற்காலிக தூபிக்கும் மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வின் போது சிவில் உடையில் இராணுவப் புலனாய்வு ஒற்றர்கள் பலர் மக்களுடன் மக்களாக ஒன்றினைந்து நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துள்ளதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

No comments:
Post a Comment