May 30, 2015

ஈழ அகதி மீதான தண்டனை அவுஸ்திரேலியாவில் கொலை குற்றச்சாட்டு நிரூபனம்!

அவுஸ்திரேலியாவில் கொலைகுற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈழ அகதி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது.அடிலைட் உயர்நீதிமன்றத்தில் அவரின் வழக்கு விசாரணை இடம்பெற்றது.கேதீஸ்வரன் சிவபெருமான் என்ற 35 வயதான ஈழ ஏதிலியை கத்தியால் குத்தி கொலை செய்தாக, சதீஸ்வரன் சுப்பையா என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

விசாரணைகளின் போது அவர் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்து வந்தார்.
எனினும் நேற்றைய விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து எதிர்வரும் ஜுலை மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment