இலங்கையினில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான
விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள போதும்
வடகிழக்கினில் கொல்லப்பட்ட
ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றி கண்டு கொள்ளப்படாதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
மூடி மறைக்கப்பட்டுள்ள ‘பைல்கள்’ மீள திறக்கப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களை நோக்கும்போது ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் மற்றும் பலியாகியுள்ளமை, சுதந்திரமான ஊடகத்துறை எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள் என்பதை நாம் அறிந்ததே.
மறைக்கப்பட்டுள்ள பல விசாரணைகள் மீண்டும் மேலெழுப்பப்பட்டு முறையானதும் பாரபட்சமற்றதுமான விதத்தில் விசாரணைகளை முன் னெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளோம்.
அரசாங்கம் என்ற வகையில் இது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எனினும் வட-கிழக்கினில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் போன்றவை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment