April 17, 2015

வளலாய் மீள்­கு­டி­யேற்ற பிர­தே­சத்தில் கிண­று­களில் வெடி­குண்டு அபாய எச்­ச­ரிக்கை!

வளலாய் மீள்குடியேற்ற பிரதேசத்தில் 25க்கும் மேற்பட்ட கிணறுகளில் வெடிகுண்டு அபாய எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதால் அக்கிணறுகளில் இருந்து விவசாயச் செய்கைக்கு நீரைப்பெற முடியாமல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


வளலாய் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். இம்மக்கள் ஜீவனோபாயத் தொழிலாக விவசாயத்தையே முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வளலாய் பிரதேசத்திலுள்ள 25 க்கும் மேற்பட்ட கிணறுகளில் வெடிகுண்டு அபாய எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் இப்பிரதேச விவசாயிகள் தாம் மேற்கொண்டுள்ள விவசாயச் செய்கைக்கு அக்கிணறுகளில் இருந்து நீரைப்பெற முடியாதுள்ளனர். இதனால் விவசாயிகள் செய்வதறியாதுள்ளனர்.
இப்பிரதேசத்தில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னர் இக் கிணறுகளிலுள்ள வெடிகுண்டுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கையளித்திருந்தால் பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருக்கலாம் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிணறுகளிலுள்ள வெடிகுண்டு அகற்றப்படாமல் இருப்பதால் கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாத நிலையில் காத்து கிடக்கிறோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே வளலாய் பிரதேச கிணறுகளை துப்புரவு செய்து விவசாயம் செய்வதற்கு பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment