வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியைக் காணவில்லை என அவரது மனைவி இன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மகாதேவன் மணிவண்னண் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென காணாமல்போனவரின் மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார் எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment