March 18, 2015

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை நோர்வேயில் மேற்கொண்ட அரசியல் சந்திப்புக்கள்!

நோர்வே ஈழத்தமிழர் மக்களவையின் (NCET) அனுசரணையுடன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் (ICET) பல இராசதந்திர சந்திப்புக்களை நோர்வே பாராளுமன்றத்திலும் வெளிநாட்டமைச்சிலும் நடத்தப்பட்டது.
முதல்சந்திப்பு நோர்வேயின் ஆளும் கட்சியின் கூட்டுக்கட்சியான கிஸ்தவகட்சியின் (KRF) தலைவரும் வெளிவிவகாரக்குழுவின் அங்கத்தவருமான குனுத்ஆறில்ஹாராய்ட (Knut Arild Hareide) அவர்களுடன் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெறும் பாலியல்வன் முறைகள் மற்றும் தேவாலயங்களின் மீதான தாக்குதல்கள், பௌத்ததீவிரவாதத்தின் உச்சக்கட்டம் சமயரீதியான வன்முறைகளை தூண்டிவிடுகிறது என்பதை கூறி நோர்வே இன்றும் பொறுப்புக்கூறல் தார்ப்பரியத்திலிருந்து தப்பமுடியாது போன்ற பல முயக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் ஆவணங்களும் கையளிக்கப்பட்டதுடன் புதிய ஆட்சி மாற்றத்தால் தமிழர்களுக்கு விடிவு ஏற்படாது என்பதே நிஜம் என்பதையும் அனைத்துலக மக்களவைப் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இரண்டாவது சந்திப்பு தொழிலாளர்கட்சி (AP) வெளிவிவகார உறுப்பினர்களான ஓஸ்முனட்  (Aasmund) மற்றும் ஆலோசகர் மரியான்னசெயப் (Marianne Seip) ஆகியோர்கலந்துகொண்டனர்.
அமைதிப் பேச்சுக்கள் நடைபெற்ற போது நோர்வேயில் ஆளும் கட்சியாக தொழில்கட்சி இருந்ததால் அவர்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றி எடுத்துக்கூறியதுடன் இலங்கையில் புதிய ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கு என்றுமே ஒரு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்கப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டது.

13ம் திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு ஒரு நிம்மதியானதும் பாதுகாப்பானதுமான அரசியல் தீர்வை ஏற்படுத்தாது எனவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வெளிநாட்டமைச்சில் மிக நீண்ட நேரமாக பல கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடல்கள்நடைபெற்றது.

பல வாதத்திற்குரிய கருத்துக்களை முன்வைத்ததுடன் முக்கிய ஆவணங்களும் கையளிக்கப்பட்டது. தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்னதையும் அவர்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படடது.

இலங்கையில் ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கு அமைதியைத்தரும் என்ற கொள்கையில் இருக்கும் நோர்வே வெளிநாட்டமைச்சிற்கு அங்கு என்ன நடைபெறுகின்றது என்ற நிஜத்தையும் உணர்த்தப்பட்டது.

வுல்லாதிக்க சக்திகளின் போட்டி அரசியலில் தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் என்றும் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கவேண்டிய தார்ப்பரியம் நோர்வே நாட்டிற்கு உள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பிற்போடப்பட்டது தவறு என்ற விசனத்தையும் அனைத்துலகமக்களவைப் பிரதிநிதிகள் தெரியப்படுத்தினர்.



No comments:

Post a Comment