கொடிகாமம் பகுதியில் கோவில் குருக்கள் ஒருவர் குடித்து விட்டு வாகனம் ஓடியதால் நீதிமன்றில் 7500 ரூபா அபராதம் கட்டிய சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஐயர் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 4ம் திகதி ஏ9 வீதியில் கொடிகாமம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பொலிசாரிடம் கையும் மெயுமாகச் சிக்கியுள்ளார்.
இதன் பின்னர் இவர் சாவகச்சேரி நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதவான் ஆலயகுருக்கள் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது மதத்திற்கு இழுக்கான என்று இவரை கடுமையாக எச்சரித்ததுடன் 7500 ரூபா தண்டமும் கட்ட தீர்ப்பளித்தார்.
அத்துடன் ஐயரின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் மூன்று மாதகாலத்திற்கு தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment