January 18, 2015

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வருகிறார் பீதியில் மகிந்த!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் அமர்த்தும் முயற்சியில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். கட்சியின் யாப்பு விதிகளில் மாற்றம் செய்து மீளவும் சந்திரிக்காவை தலைமைப் பதவியில் அமர்த்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிக்காவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது சுதந்திரக் கட்சி தலைமைப் பதவி குறித்து பேசப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பிலான சட்டத் திருத்தங்களை ஜனாதிபதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment