“புலிப் பார்வை” மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்? அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை
ஒழுங்கமைத்துள்ளார் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் அவர்கள். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் திரையிடப்பட இருக்கின்ற புலிப் பார்வை மற்றும் இலங்கையின் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படம் ஆகியவற்றை எதிர்பது ஏன் என்பது குறித்தும்
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்
நாள்: 19.08.2014, செவ்வாய்க்கிழமை
நேரம்: முற்பகல் 11.30 மணி
நாள்: 19.08.2014, செவ்வாய்க்கிழமை
நேரம்: முற்பகல் 11.30 மணி
இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்த செய்திகளை தங்கள் ஊடகத்திலும் செய்தித்தாள்களிலும் வெளியிட ஏதுவாக செய்தியாளரையும் புகைப்படக் கலைஞரையும் அனுப்பி வைத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
தி.வேல்முருகன்.
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு
Sharing
No comments:
Post a Comment