June 21, 2014

மாமனிதர் இராஐரட்ணம் அவர்களுக்கு இறுதி வணக்கம்


ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்ணம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர்.


சிங்கர் இராஐரட்ணம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்ணம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு.

அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேணினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும், அறிக்கைகள் விடுவதற்காகவும் அவர் செயற்பாடு என்றும் அமைந்ததில்லை. மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் தன்னைப்போல் சிந்திப்பவர்களுடன் மனம் திறந்து ஆழமாகப் பேசுவார்.


ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இன்றைய இளையவர்கள் பலரும் இன்றையநிலை, காலம் சார்ந்து சிந்திக்கத்தவறுபவற்றையே சிந்திக்கும் வல்லமை பெற்ற காலத்தையும் வென்றவர்.

இவரது ஆற்றலையும், ஆழுமையையும், தீர்க்கதரிசனத்தையும் இனம் கண்டு கொண்ட தமிழீழத் தேசியத்தலைமை இவர் மீது ஆழமான அன்பையும், பற்றுறுதியையும், நீண்ட தொடர்பாடலையும் கொண்டிருந்தது என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.

அதேபோன்று தமிழ் தாயின் தவப்புதல்வனான இவர் தமிழர் தேசம் பேரழிவை சந்தித்த போதெல்லாம் எவ்வித விளம்பரமுமின்றி தனி மனிதனாக மட்டுமன்றி குடும்பமாக தமிழர் தேசத்தை தாங்கி நின்ற வரலாறு யாரும் அறியாத உச்சம்.

இலங்கைத் தமிழ்ச் சங்கம், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் தலைவர் மட்டுமின்றி, 2003ஆம் ஆண்டு இவருக்கு அச்சங்கம் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கொளரவித்தமையையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

இந்தியா என்பது வெறுத் தமிழகம் அல்ல அதையும் கடந்து வெல்லப்பட வேண்டியது என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த பாரதீக ஐனதா ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியவர். அது குறித்த பார்வை, வெற்றியை நோக்கிய உபாயங்கள், அதை வென்றெடுப்பதற்கான கடினமான உழைப்பு அனைத்தும் ஒன்று திரண்ட ஒரு புரட்சித் தமிழனே மாமனிதர் இராஐரட்ணம் அவர்கள்.

தமிழர் வரலாறு, தமிழர் உரிமைப்போராட்டத்தின் நியாயத்தன்மை குறித்து புத்தகம், கட்டுரைகள், விளக்கக் குறிப்பேடுகள் என பலவற்றை எழுதி தமிழர் அமைப்புக்களின் பெயரில் தானே அச்சிட்டு வெளியிட்டார்.

இவரது துணைவியாரின் ஆழமான தமிழினப்பற்றே இவர் தனது இனப்பணியை முழுமையாகச் செய்வதற்கும், இவரது பிள்ளைகளும் இனப்பற்றுடன் இயங்குவதற்கும் பாரிய பின்புலமான அமைந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும், தனது இனத்தின் மேல் கொண்ட உச்சமான பற்றுறுதி காரணமான தமிழர் தாயகத்தில் பல பாடசாலைகளில் கணனிக்கூட அமைப்பு மற்றும் வைத்தியசாலைகளின் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி என பல திட்டங்களை தனது மக்களுக்காக தானாகவே செய்து கொடுத்தார்.

இனம், உரிமை சார்ந்த பயணத்தினால் இவரது குடும்பம் பல்வேறு உச்சசவால்களையும், சரிவுகளையும் சந்தித்தாலும், அது குறித்த எவ்வித வருத்தத்தையும் இவரோ இவரது குடும்பமோ என்றும் வெளியிட்டதில்லை. மாறாக முன்னரை விடப் பலமடங்கு என்றும் தொண்டாற்றுபவர்களாகவே திகழ்திருக்கின்றார்கள்.

தமிழர் தேசியத்தால் ‘'அப்பா” என பேரன்புடன் அழைக்கப்பட்ட மாமனிதர் இராஐரட்ணம் இவர்களது மறைவு ஈழத்தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் பலதைக் கற்றுக் கொள்ளவேண்டும். பெரும்பணம், கல்வி, உச்சவேலைவாய்ப்பு என அனைத்தும் பெரிதாக அமைந்தாலும் சாமானியனாக, இனப்பற்றுடன், உச்ச அர்ப்பணிப்புடன் இயங்குவது என்பதற்கு இவர் ஒரு வரலாற்றுப்புத்தகம்.

இவரது இழப்பால் துயருறும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் துயரில் ஈழத்தமிழினமும் முழுமையான இணைந்து கொள்கிறது.

மாமனிதர்கள் மரணத்தை வென்றவர்கள். என்றும் எம் மனங்களில் வாழ்வார்கள்.

Mamanithar J.M. Rajaratnam, a graduate of University of Ceylon, was the winner of a five year open Government Scholarship for studies in Accounting in the UK. He was the CEO and Chairman Board of Directors of Singer Company’s operations in Ceylon, was transferred to the US head office and appointed Vice President of Finance and Accounting of the International Group of the Corporation. Mamanithar J.M. Rajaratnam has been included in the Marquis Who’s Who in America.

After his retirement, he works as a Consultant to the World Bank, Member of the Roster of Experts on matters related to transnational corporations of the United Nations and a Member of the US Executive Volunteer Service Corps.

Mamanithar J.M. Rajaratnam lobbied governments and international bodies for the Eelam Tamil cause, has published “Tamils of Sri Lanka – The quest for human dignity” issued by the Tamil Information Center of UK. He has spoken at various conventions in the USA, Canada, the UK and India on the Tamil Eelam cause.

No comments:

Post a Comment