அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் படிப்பை 10 வயதில் முடித்து, இந்திய வம்சாவளி மாணவர் சாதனை படைத்துள்ளார். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமென்டோ பகுதியைச் சேர்ந்த தனிஷ்க் ஆப்ரஹாம், 7 வயது முதல் வீட்டில் இருந்தபடியே படித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்நிலைப் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அவருக்கு, அதற்கான பட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இதுகுறித்து அந்த மாணவர் கூறியதாவது: கடின உழைப்பால் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். விரைவில் உரிய தேர்வுகளில் வெற்றி பெற்று, பல்கலைக்கழத்திற்கு படிக்கச் செல்வேன்.
மழலையர் பாடசாலைக்குச் செல்லும்போதே, 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு புத்தகங்களை என்னால் படிக்க முடியும். அந்த வகுப்புகளின் கணக்குகளைப் போட முடியும். படித்து முடித்து விஞ்ஞானியாகவோ அல்லது மருத்துவராகவோ ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். நாட்டின் அதிபராக ஆக வேண்டும் என்றும் எனக்கு கனவு உள்ளது தனிஷ்க் ஆப்ரஹாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment