August 17, 2016

அவுஸ்திரேலியா, இலங்கை அரசுடன் நெருங்கி செயற்படும்!

சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக இலங்கையும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் நெருங்கி செயற்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த 6 இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாது.

2013ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த எந்த படகுக்கும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், ஆட்கடத்தல்காரர்களிடம் ஏமாந்து, உயிர் ஆபத்தை கவனத்தில் கொள்ளாது, இப்படியான சட்டவிரோத நடவடிக்கைகளில ஈடுபட வேண்டாம் எனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இந்த சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க எதிர்காலத்திலும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் தமது அரசாங்கம் செயற்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment