August 17, 2016

கொக்கிளாய் விகாரை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் த.தே.கூட்டமைப்புக்கு இல்லை!

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தம் கருத்து தெரிவிக்கையில்,

கொக்கிளாய் ஒரு தமிழர் இடம் என்று கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த உரிமையும் கிடையாது, அதற்கு காரணம் இந்த விகாரை பல வருடங்களாக இங்குதான் காணப்படுவதாக ராஜித குறிப்பிட்டார்.

கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு கடந்த கால ஆட்சியில் ராஜித சேனாரட்ன தலைமையில் நீர் விநியோகம், பாதை புனரமைப்பு என்பன இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் விகாரையை அகற்ற யாருக்கும் உரிமை கிடையாது எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் இருக்கக்கூடிய சிலர் இவ்வாறான கடின கருத்தினை முன்வைக்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொக்கிளாய் தமிழர் வாழும் இடமாக இருந்தாலும் மத வழிபாட்டுக்குரிய தலம் என்பதனால் இதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.
ராஜபக்ச குடும்பத்தினரிற்க்காக ஒதுக்கப்பட்ட இரண்டு மாடி அதிசொகுசு கட்டடம் இன்று அவர்களுக்கு இல்லாமல் போயுள்ளது!

grand hight hotel நிறுவனத்தின் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டல் கட்டிடத்தின் ஒரு தொகுதியில் இரு மாடிகளை அதி சொகுசாக தயார் செய்து தமக்கு வழங்க வேண்டும் என ராஜபக்ஸ குடும்பம் நிறுவனத்தலைவரிடம் கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

குறித்த ஹோட்டல் கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த பின்னர் இந்த இரண்டு மாடிகளை தனக்கு தரவேண்டும் என ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் இதே போன்று தான் இவர்களின் குடும்பத்தின் தனிப்பவனைக்காக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் அதிசொகுசு அறை ஒன்று அமைக்கப்பட்டது.

இதற்க்கு பலமில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனினும் இன்று அந்த அதிசொகுசு விமானம் முழுமையாக மாற்றப்பட்டு மக்களின் பிரயாணங்களுக்காக விடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதேபோலத்தான் கிராண்ட் high hotel இன் இரு நாடியையும் சாதாரண முறையில் அமைப்பதற்கு தாம் கோரியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ராஜபக்ஸ குடும்பம் மக்கள் துன்பப்படும் காலத்தில் அதி சொகுசாக வாழ்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment