வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கொத்தணி முறையிலான சுத்தப்படுத்தல் செயல் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேலால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண சபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், நா.திரவியம் (ஜெயம்) அகியோர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்புடனும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் உள்ளுராட்சி மன்றங்கள் இணைந்து ஆளணி மற்றும் வாகணங்களை பயன்படுத்தி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச பொது மக்களின் பங்களிப்புடன் மேற்படி செயல் திட்டமானது கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் உள்ளுராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது மூன்று தினங்களில் நடைபெறவுள்ளதாக சபை செயாலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் திண்மக் கழிவு அகற்றல் செயற்பாடு, வடிகால் துப்பரவு, இயற்கை வடிகான் துப்பரவு செய்தல், விழிப்பூட்டல் துண்டுப் பிரசுரம் வினியோகித்தல், மீள் குடியேற்ற கிராமங்களுக்கு கிறவல் இடல் போன்ற செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
முதற்கட்ட நடவடிக்கையாக திண்மக் கழிவு அகற்றும் செயற்பாடு செம்மண்ணோடை, வாழைச்சேனை மற்றும் பேத்தாழை அகிய இடங்களில் மயானங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வடிகான் துப்பரவு பணியானது கல்குடா பிரதான வீதி வடிகான், கண்ணன் கிராமம் வடிகான், செம்மண்ணோடை வடிகான் போன்றன துப்பரவு செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை வடிகான்களை துப்பரவு செய்தல் பணியானது பாலையடித்தோனா, கிரான் கிழக்கு, கண்ணகிபுரம், செம்மண்ணோடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை இது தொடர்பான விழிப்பூட்டல் துண்டு பிரசுரங்கள்; சபை உத்தியோகத்தர்களினால் வினியோகிக்கப்பட்டு வருவதுடன், ஒலிபெருக்கி சாதனங்கள் மூலம் பிரதேசங்கள் தோறும் விழிப்பூட்டலும் இடம்பெற்று வருகிறது.
இறுதியாக மீள்குடியேற்ற கிராமங்களான மீறாவோடை, முறுத்தானை, பூலாக்காடு, பேரில்லாவெளி, குடும்பிமலை, கிரான் மேற்கு, கிரான் மருதநகர் மற்றும் ஆஞ்சநேயர்புரம் ஆகிய கிராமங்களில கிறவல் இடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment