தமிழ்மக்கள் தமது உரிமைக்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். மக்களின் போராட்டம் தொடரும் வரை எமது போராட்டங்களும் தொடரும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து, ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதன்போது மக்களிடம் கலந்துரையாடும் போதே மாகாணசபை உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் செயற்பாடுகளில் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்துதான் எமது இளம் சமூகம் அன்று ஆயுதமேந்தி போராடினார்கள். அது இப்பொழுது நிரூபிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேச பிரதிநிதிகளிடம்தான் அழுத்தம் கொடுக்கின்றோம். தொடர்ந்தும் அதைத்தான் செய்யப் போகின்றோம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment